புதுடெல்லி: 
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடந்த  சீன ஊடுருவலை மக்களிடம் மறைக்கின்றார், ஏன் அவர் நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்தார் என்று கூறும்படி கேட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது இந்தியாவில் எவ்வித ஊடுருவலும் இல்லை என்று கூறினார். மேலும் பிரதமர்  இவ்வாறாக கூறியது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதற்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியதற்கும் நேர்மறையாக உள்ளது….. இது போன்று இவர்கள் நேர்மறையாக பேசுவதால்தான் நாங்கள் இன்று நாட்டு மக்களுக்காக இந்த கேள்வியை எழுப்ப நேர்ந்துள்ளது என்று கபில் சிபில் குறிப்பிட்டிருக்கிறார்.
Indian army soldiers rest next to artillery guns at a makeshift transit camp before heading to Ladakh, near Baltal, southeast of Srinagar, June 16, 2020. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES.
மேலும் சீனாவும் நாங்கள் இந்தியாவிற்குள் நுழையவே இல்லை., கால்வான் பள்ளத்தாக்கில் தான் இருந்தோம், கால்வான் பள்ளத்தாக்கு முழுவதும் எங்களுக்கு சொந்தமானது நாங்கள் எங்களுடைய சொந்த மண்ணில் தான் இருந்தோம் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறாக சீன ராணுவத்தினர் கூறியுள்ளது சிந்திக்கவைக்கும் விதமாக உள்ளது என்றும்  கபில்சிபல் சுட்டிக்காட்டினார்.