கொச்சி:
சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியா கொரோனா வைரஸ் மட்டுமின்றி  எல்லைப்பிரச்சினையிலும், சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் சென்று பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன்சுவாமி கூறி உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி மேலாண்மை சங்கம் ஏற்பாடு செய்த மெய்நிகர் கூட்டத்தில் சென்றிருந்த  சுப்பிரமணியன்சுவாமி, ‘கொரோனா வைரஸ் நமது பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். அப்போரு,
கொரோனா வைரஸையும், தற்போதைய சீன தாக்குதலில் இருந்தும் இந்தியா தப்பிக்கும் ” என்று  கூறியவர்,  “1965 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இந்தியா வீழ்ச்சியடையும் என்று பலர் கூறியிருந்த னர். ஆனால் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில், பற்றாக்குறைகள் இருந்தபோதிலும், திட்டமிட்ட திட்டங்களுடன் இந்தியா வெறும் 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த விவசாய உற்பத்தியாளராக மாற முடிந்தது என்று நினைவு கூர்ந்தார்.
இந்தியாவில், நிதி நிலைமையை மேம்படுத்த அதிக வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தவர்,  “அதிகரித்த உற்பத்தித்திறன் மூலம் பொருளாதாரம் விரிவாக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.
சீனாவுடனான தற்போதைய எல்லைப் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், எனவே ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். “இது பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும்” என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

சீனர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்தவர்,  முன்னாள் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், கேரள மேலாண்மைக் கழகத் தலைவர் ஜிபு பால், கே.எம்.ஏ திட்டக் குழுத் தலைவர் எஸ்.ராஜ்மோகன் நாயர், மூத்த துணைத் தலைவர் ஆர் மாதவ் சந்திரன், கவுரவ செயலாளர் பிபு புன்னூரன் ஆகியோர் பங்கேற்றனர்.