டெல்லி: கொரோனா பாதிப்பில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி தலைநகர் டெல்லி 2ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அம்மாநிலத்தில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59,746 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் 2ம் இடத்தில் இருந்த தமிழகத்தை பின் தள்ளி டெல்லி முன்னேறி இருக்கிறது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, 59377 கொரோனா பாதிப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.