மும்பை
மும்பை மாநகரில் ஜூலை 15 தேதிக்குப் பிறகு கொரோனா தாக்கம் தினசரி 200 ஆகக் குறையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநகராட்சியாக மும்பை உள்ளது. அகில இந்திய அளவில் இரண்டாவதாக உள்ள தமிழகத்தில் 56000 க்கும் அதிகமானோர் உள்ளனர். ஆனால் மும்பையில் 64000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குத் தினமும் சுமார் 1500 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்படுகிறது.
இது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாகல், “மும்பையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஜூன் 3 முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டன. இதனால் நான் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் என நம்பினேன் அதாவது தினசரி பாதிப்பு 1500லிருந்து 2500 ஆகலாம் என அச்சம் அடைந்தேன்.
ஆனால் ஒரு சில அளவுக்கே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த நில நாட்களாகத் தினசரி பாதிப்பு 1500க்கும் குறைவாக உள்ளன. இது நல்ல அறிகுறியாகும். இன்னும் 15 நாட்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. ஜூலை 15 முதல் தினசரி சராசரியாக 100 முதல் 200 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.