குழந்தை பிறந்தும் தாலிகட்ட மறுப்பு..  மாமியார் வீட்டுக்கு பார்சல்…

தனது கைக்குழந்தையுடன் பிரியா எனும் 19 வயது பெண் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொன்னுசாமி என்பவர்  மீது புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் எனபவரது மகன் பொன்னுசாமி(21). இவரும் குரூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா (19) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொன்னுசாமி, அவரை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இது கடந்த ஆண்டு செப்டம்பர் வாக்கில் நடந்துள்ளது.   இதன் காரணமாகக் கர்ப்பமான பிரியா, 15 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பொன்னுசாமியிடம் வற்புறுத்தி வந்த பிரியாவை இவர் தட்டிக்கழித்தே வந்துள்ளார்.  மேலும் அவர் தற்போது பிரியாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேறு வழியின்றி பிரியா பொன்னுச்சாமி தன்னை ஏமாற்றி வருவதாகக் காவல்நிலையத்தைத் தஞ்சமடைந்துள்ளார்.  இவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது கைது செய்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் ..

– லெட்சுமி பிரியா

[youtube-feed feed=1]