சென்னை:
கொரோனா அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை தலைவர் பிரதீப் கவுர் டிவிட் போட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், அதிகம் பரவும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றுமுதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஐசிஎம்ஆரின் துணை தலைவராக உள்ள பிரதீப் கவுர், தனக்கு கொரோனா பாதிப்பு தனக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால், தன்னை தானே 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை பொதுமுடக்கம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
சென்னையில் லாக்டவுன் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் முன்கூட்டியே தனிமைப்படுத்திவிட வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுப்பிரச்சினை ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.