பீஜிங்:

கொரேனா வைரஸ் பிறப்பிடமாக திகழ்ந்த சீனாவில், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

சீன தலைவர் பீஜிங்கில்  புதிதாக 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து, தற்போதைய பரவலின் பாதிப்பு 161 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,325 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் தலைதூக்கி உள்ளது. தலைநகர் பீஜிங்கில் தொற்று பரவி வருகிறது.  293 பேர்  சிகிச்சைபெற்று வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் பரிசோதனை செய்யப்பட்டு வரவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 32 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 83ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது.  நோயில் இருந்து இதுவரை 78ஆயிரத்து 398 பேர் குணமடைந்து உள்ளனர்.  293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது.
[youtube-feed feed=1]