வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,409 உயர்ந்து 85,70,265 ஆகி இதுவரை 4,55,578 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,409 பேர் அதிகரித்து மொத்தம் 85,70,265 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,126 அதிகரித்து மொத்தம் 4,55,578 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 45,09,256 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,482 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,962 பேர் அதிகரித்து மொத்தம் 22,63,629 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 747 அதிகரித்து மொத்தம் 1,20,688 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,30,782 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,050  பேர் அதிகரித்து மொத்தம் 9,83,359 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,204 அதிகரித்து மொத்தம் 47,869 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,03,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,790  பேர் அதிகரித்து மொத்தம் 5,61,091 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 182 அதிகரித்து மொத்தம் 7,660 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,13,963 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,827  பேர் அதிகரித்து மொத்தம் 3,81,091 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 342 அதிகரித்து மொத்தம் 12,604 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,05,182 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1218 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,00,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 135 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,288 ஆக உள்ளது.