சென்னை:

சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும்,  தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும்  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.  மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த சென்னை தி.நகர் காவல் ஆய்வாளர் மறைவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,  இன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து காவலர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் உள்பட அனைத்து காவல்நிலையங்களிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து  செய்தியளார்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது,

சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன , அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும். பணியாளர்கள் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல அனுமதி இல்லை.

முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

சென்னையில் இருந்து வெளியே தினசரி வேலைக்கு செல்ல அனுமதி கிடையாது.

காய்கறிகள் மளிகை கடைக்கு அருகில் இருப்பதை பயன்படுத்தவும்.  காய்கறிகளை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது.

மத்திய மாநில அரசு அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த முறை அறிவுரை சொல்லி அனுப்பியதால்  மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

சென்னையில் டிரோ கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்கள் கண்காணிக்குக்கப்படு வார்கள். தேவை இல்லாமலாமல் வெளியே செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது .

வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்

மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  18000 காவலர்களுக்கு பணியில் உள்ளனர்.

ஆட்கள் பற்றாக்குறை இல்லை 10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம் .

இவ்வாறு அவர் கூறினார்.