சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், 33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை செய்லாளரான பீலா ராஜேஷ்க்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரத்தை தாண்டி பாதிப்புகள் தெரிய வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிகப்பட்சமாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை576 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே கொரோனாபாதிப்பு அதிகமுள்ள பகுதியாக சென்னை திகழ்கிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 15 மண்டலங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள், மற்றும் 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு வணிக வரித் துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக மீண்டும் ஜெ ராதாகிருஷ்ணனே நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொரோனாவை தடுக்க 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
இந்த பட்டியலில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக
அரியலூர் மாவட்டத்திற்கு சரவணவேல்ராஜ், பெரம்பலூர் மாவட்டத்துக்கு அனில் மேஷ்ராம், கோவை மாவட்ட சிறப்பு அதிகாரியாக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட அதிகாரியாக சுப்ரியா சாஹூ, கடலூர் மாவட்ட அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி, தருமபுரிக்கு சந்தோஷ்பாபு , திண்டுக்கல் மாவட்ட அதிகாரியாக மன்கத் ராம்சர்மா, ஈரோடு மாவட்ட அதிகாரியாக உஷா, குமரி மாவட்ட அதிகாரியாக ஜோதி, கரூர் மாவட்ட அதிகாரியாக விஜயராஜ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
திருச்சி மாவட்ட அதிகாரியாக ரீட்டா ஹரீஷ் தாக்கர், மதுரை மாவட்ட அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை ஷம்பு கல்லோலிகர், தஞ்சை மாவட்ட அதிகாரியாக பிரதீப் யாதவ், நாமக்கல் மாவட்ட அதிகாரியாக தயானந்த் கட்டாரியா, சேலம்- நஜிமுதீன், விருதுநகர் மாவட்ட அதிகாரியாக மதுமதி, தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக குமார் ஜெயந்த், நாகை மாவட்ட அதிகாரியாக முனியநாதன், ராமநாதபுரம் மாவட்ட அதிகாரியாக சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட அதிகாரியாக மகேஷ், திருவாரூர் மாவட்ட அதிகாரியாக மணிவாசன், தேனி மாவட்ட அதிகாரியாக கார்த்திக், திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியாக தீரஜ்குமார், நெல்லை மாவட்ட அதிகாரியாக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அதிகாரியாக கோபால், வேலூர் மாவட்ட அதிகாரியாக ராஜேஷ் லக்கானி, விழுப்புரம் மாவட்ட அதிகிராயாக முருகானந்தம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே சென்னைக்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ்-ம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு டாக்டர் பாஸ்கரன் ஐஏஎஸ்-ம், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு டாக்டர் எல்.சுப்பிரமணியன் ஐஏஎஸ்-ம் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.