
மகேஷ் பாபு சரிலேறு நீக்கவேறு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பரசுராம் இயக்கும் ‘சரக்கு வாரி பாட்டா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .
சரக்குவாரி பாட்டா படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று வெளியானது.
தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ள இந்தப் படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.
இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்வளை வெளிவந்துள்ளன . கொரோனா ஊரடங்கு முடிவிற்கு பின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .
[youtube-feed feed=1]