சென்னை:

மிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174  பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து,  இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை  27,624  ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.  சவுதி, சிங்கப்பூர், குவைத், மலேசியாவிலிருந்து திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும்,  மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 38 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும், கர்நாடகாவிலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கும், கேரளாவிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

[youtube-feed feed=1]