நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், பாதுகாப்பு பணிகளையும் தீவிரப்படுத்த என்றும், ,
அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும்,
மக்கள் மாஸ்க் அணிவதை மாநகராட்சி அதிகாரி, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும், என்றும் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.