Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட 3 ஐஏஎஸ் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக 15 மண்டலங்களுக்கும், சிறப்பு அதிகாரிகளாக 15 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மே மாதம் 21ந்தேதி தமிழகஅரசு நியமனம் செய்தது.
இந்த நிலையில், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணா கரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், எந்தவொரு உயர்அதிகாரி களும் களத்தில் இறங்கி பணியாற்றாத நிலையில், 3 அதிகாரிகளை தமிழகஅரசு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.