சென்னை:
முழு ஊரட்ங்கு பகுதியில், வரும் 22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதி தீவிர பரவல் காரணமாக சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் அரிசி ரேசன் அட்டைதாரர்கள் உள்பட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 4 மாவட்டங்களுக்கான முழு ஊரடங்கின்போது முதலமைச்சர் அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவியை 22ம் தேதி தொடங்கி 26க்குள் முடித்திட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.