சென்னை:
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளியான சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான இன்பான் பதான் ரூ.25 ஆயிரம் அனுப்பி உதவி செய்துள்ளார்.
உதவி நன்றி கூர்ந்துள்ள செருப்பு தைக்கும் தொழிலாளியான பாஸ்கரன். இந்த பணத்தை தான் சம்பாதித்து, திருப்பி கொடுத்து விடுவேன் என்கிறார் .
சென்னையை சேர்ந்தவர் பாஸ்கரன். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதியில் பிளாட்பாரத்தில் கடைவிரித்து செருப்பு தைத்து வருகிறார். விளையாட வரும் வீரர்களின் செருப்பு, ஷுக்களை போன்றவற்றை அழகாகவும், நேர்த்தியாகவும் தைத்துக் கொடுப்பதில் வல்லவர். இதன்காரணமாக, சேப்பாக்கத்தில் ஆட்டம் நடைபெறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் 1000 வரை சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
ஐ.பி.எல் போட்டி நடைபெறும் நாள்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ காப்லராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வீரர்கள் டிரெஸ்ஸிங் அறை அருகே பாஸ்கரனுக்கும் சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு அமர்ந்து கொண்டு பாஸ்கரன் சென்னை அணி வீரர்களின் காலணிகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வார்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஐ.பி.எல் தொடர் நடைபெறாத நிலையில், அவரின் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் வறுமையில் வாடி வந்தனர்.
இந்த நிலையில், காப்லர் பாஸ்கரன் குறித்த ஞாபனம் கிரிக்கெட்வீரர் இன்பான் பதானுக்கு எழுந்துள்ளது. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என எண்ணத்தில், அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ ரேணுக் கபூரிடத்தில் பாஸ்கரனின் செல்போன் எண்ணை வாங்கித் தருமாறு கடந்த 6ந்தேதி கேட்டுள்ளார். ஆனால், ரேணுக் கபூரோ அதை மறந்துவிட்ட நிலையில், மற்றும் பல்வேறு நபர்களை தொடர்புகொண்டு காப்லர் பாஸ்கரன் போன் எண்ணை வாங்கி, அவரிடம் விசாரித்துள் ளார். அவரது வருமான குறித்தும் விசாரித்தவர், அவருக்கு போதிய வருமானம் இல்லை என்பதை தெரிந்துகொண்டு, அவரது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கி, உடடினயாக ரூ.25ஆயிரம் அனுப்பி உள்ளார்
இதைக்கொண்டு தனது வாழ்க்கையை மீட்டுள்ளார் பாஸ்கரன், இன்பான் பதானின் உதவி குறித்து கூறிய பாஸ்கரன், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், ‘இக்கட்டான சூழலில் என் குடும்பத்தை எப்படி நடத்த போகிறேன் என்று கவலைப்பட்ட சூழலில் தான் என்னை இர்பான் பதான் தொடர்பு கொண்டு பணம் அளித்தார். அவரது உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்… இந்த பணத்தை நான் கண்டிப்பாக ஒரு நாள் திருப்பி கொடுத்து விடுவேன்.
மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கினால் எனக்கு பழையபடி வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும்’ என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பாஸ்கரன்.
கடந்த 2015- ம் ஆண்டு ஒரே ஒரு சீசனில் மட்டும்தான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இர்பான் பதான் விளையாடியுள்ளார். எனினும், செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல் நினைவு வைத்து உதவியது பாராட்டுக்குரியதே!