2021-ம் ஆண்டு வாஷிங்டனில் நடக்கும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி 2021, பிப்ரவரி 28-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கால் ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும் என நிர்வாகிகள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
கடந்த 40 ஆண்டுகளி்ல் இது தான் நான்காவது முறையாக தேதி மாற்றம் செய்ய பட்டிருக்கும் நிகழ்ச்சி .
1981-ம் ஆண்டு – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனை கொலை செய்யும் முயற்சி நடந்ததால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
1938-ம் ஆண்டு – லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
1968-ம் ஆண்டு – டாக்டர் மார்டின் லூதர் கிங்கை கொலை செய்ய முயற்சி நடந்த போது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.