வெலிங்டன்:
கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இது மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து 7 வாரங்கள் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அங்கு இதுவரை மொத்தம் 1,154 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 22 பேர் உயிரிழந்தனர். 1,482 பேர் குணமடைந்தனர்.
இதையடுத்து, தொடர்ந்து 24 நாட்கள் புதிதாக யாருக்கு கொரோனா பரவல் கண்டறியப்படாத நிலையில், ஜூன் முதல் வாரதத்தில், கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியது. இதை அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார்.