கடலூர்:
கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கடலூர்:
கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதில் 5 வார்டுக்கு ஒரு துணை கலெக்டர் வீதம் 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, ஆய்வு செய்வார்கள்.
மேலும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள். இது தவிர 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர் வீதம் நியமிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளார்கள்.
இது தவிர முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வது நகர பகுதியில் அதிகமாக உள்ளது. முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதை தற்போது தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதனின் சமூக பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.