டெல்லி:
ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், சபாநாயகரை செயலாற்றச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தி, வழக்கை 15 நாள்களுக்கு ஒத்திவைத்தது.
ஓபிஎஸ் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அதில், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு ‘மேலாகியும் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புச்சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, சட்டப்பேரவை தலைவர் ஏன் இன்னும் முடிவு செய்ய வில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சபாநாயகரை செயலாற்றச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை 15 நாள்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.