ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். அந்த படத்தின் புகைப்படங்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
நயன்தாராவை அம்மன் வேடத்தில் பார்த்த ரசிகர்கள் பூரித்துப் போனார்கள்.
உச்சகட்டமாக ஒரு ரசிகர் நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பூஜை அறையில் மாட்டி அதற்கு மாலையும் பொட்டும் வைத்திருக்கிறார்.
நடிகைகளுக்கு கோவில் கட்டுவதை தமிழ் சினிமா ரசிகர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நடிகையை சாமியாக்கி பூஜை செய்துள்ளது கொஞ்சம் புதிதாக உள்ளது.