சென்னை:
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.
சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 50 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15 பேரும், கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 5 மற்றும் தண்டையார் பேட்டை மருத்துவமனைகளில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களில் 135 செவிலியர்கள் நலம் பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் 56 வயதான செவிலியர் கண்காணிப்பாளர் கடந்த 4 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிடி ஸ்கேனில் கிரேடு 3 என்ற பாதிப்பு தெரிந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. இவருக்கு இதற்கு முன் மார்ச் மாதத்தில் முதல்முறை தொற்று ஏற்பட்ட போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். மீண்டும் பணியில் சேர்ந்தவருக்கு இரண்டாவது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.