அனந்தபுரம்:
ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த தர்மவரம் எம்.எல்.ஏ கெதிரெட்டி வெங்கடராமி ரெட்டியின் பாதுகாவலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
உயிரிழந்த காவலர், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மறைத்து விட்டு பணியாற்றி வந்துள்ளார். ஏனெனில் அவர், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தால், சமுதாயத்தில் தனக்கு பாதிப்பு உண்டாகும் என்று பயந்தே அவர் தனக்கு உண்டான கொரோனா பாதிப்பை மறைத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து எம்.எல்.ஏ மேலும் கூறுகையில், அவரது அலுவலகத்தில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்று பணிப்பெண்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தர்மவரம் எம்எல்ஏவின் பாதுகாவலர் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, ஆந்திராவில் 5,965 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,688 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். 3195 பேர் குணமடைந்து உள்ளதாகவும், 82 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.