
நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34.
முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்துவந்தார்.
திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]