வடக்கே போன சாதனை ரயில்… 86 மணிநேர ஓட்டம்…
ஒரு நாள் ரயில் பயணத்திலேயே ஓய்ந்து போகிறோம்.
நான்கு நாள் பயணம் எப்படி இருக்கும்?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகாலாந்து மாநிலம் திமாபூருக்கு அப்படி ஒரு ரயில் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஊரடங்கினால் கேரளாவில் வாடி வதங்கிக் கிடந்த 966 நாகாலாந்து தொழிலாளர்களைச் சுமந்து செவ்வாய்க்கிழமை மாலை 2.35 மணிக்கு அந்த சிறப்பு ரயில் புறப்பட்டது.
8 மாநிலங்கள் வழியாக 86 மணி நேரம் பயணித்து நாகாலாந்தில் உள்ள திமாபூரை சனிக்கிழமை (நேற்று) காலை 5.30 மணிக்கு அடைந்தது.
மொத்த பயண தூரம் 4 ஆயிரத்து 322 கிலோ மீட்டர்.
இந்த ரயிலுக்கான கட்டணத்தொகை 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.
இந்த பணத்தை நாகாலாந்து அரசே , ரயில்வேக்கு செலுத்தியுள்ளது.
இதற்கு முந்தைய சாதனை என்ன?
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு செல்லும் ரயில் , இதுவரை நீண்ட தூரம் பயணம் சென்ற ரயிலாகக் கருதப்பட்டது.
இதன் பயண நேரம்:72 மணி நேரம்.
பயண தூரம்: 4 ஆயிரத்து 282 கி.மீ.