மீண்டும் வேலைவாய்ப்பு.. சூடுபிடிக்கும் துறைகள்..
இந்த கொரோனா ஊரடங்கின் தாக்கமாகக் கிட்டத்தட்ட 80% வரை வேலை இழப்புகள் நிகழ்ந்தன. ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 50% வரையிலான பணித்தேர்வுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக நல்ல செய்தி சொல்கின்றனர் இவர்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக நிறையப் பெரிய நிறுவனங்கள் தங்கள் காலியிடங்களை நிரப்பத் தகுதியான ஆட்களைத் தேடி வருகின்றனவாம். இதில் பெரும்பாலும், கல்வி, இ-காமர்ஸ், டேடா ப்ராஸ்ஸிங், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், வங்கி, எம்எம்சிஜி, சுகாதாரம், இன்சூரன்ஸ், டிஜிட்டல் எக்ஸ்பர்ட்ஸ், நிதி மற்றும் பார்மா துறைகளுக்கு அதிகமான பணியாட்களைத் தேர்வு செய்யப்படுகின்றனவாம்.
நாடு முழுவதும் மொத்தம் 39 கிளைகளுடன் செயல்பட்டு வரும் CIEL HR Services நிறுவன CEO ஆதித்யா மிஸ்ரா, “இப்போ தான் ஆட்கள் தேர்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடிக்குது. இப்போவே கொரோனாவுக்கு முன்பு இருந்ததில் 50% நிலைமைக்கு வந்திருக்கு. இது இன்னமும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. ஆனா அதே நேரம் டிராவல் மற்றும் ஹோட்டல் துறையின் நிலைமை தான் ஏதும் சொல்லிக்கிற மாதிரி இல்ல” என்று விளக்குகிறார்.
ரேன்ஸ்டெட் இன்டியாவின் தலைமை அதிகாரி, “ஜூன் முடிவில் நிலைமை இன்னும் மாறும். பழைய மாதிரியே ஆட்கள் தேவை தீவிரமாகும். ஏவியேஷன், டூரிசம், ஹாஸ்ப்பிட்டாலிட்டி துறையினர் மட்டும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி வரும். பாராமெடிக்கல் ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களின் தேவை இப்போ ஹை டிமான்ட்ல இருக்கு. ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி சர்வீஸஸ், டெலிவரி ஏஜெண்ட், சர்வீஸ் இன்டஸ்ட்ரீஸ், பேங்கிங், பைனான்ஸ், இன்சூரன்ஸ் துறையில் அனுபவமுள்ளவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இது சரியான நேரம். அவை போன்ற ப்ரொபைல்கள் தான் இப்போதைய தேவை” என்று தகவல் அளிக்கிறார்.
ஆனால் தற்போதைக்கு இவை அனைத்துமே “கான்டாக்லெஸ் ஜாப்ஸ்” என்கிற சமூக இடைவெளியைச் சார்ந்த பணிகளாகவே இருக்கும் என்கின்றனர் இவர்கள்.
– லெட்சுமி பிரியா