சென்னை:

ன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன்  ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்தும் மூடப்பட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. இந்த நிலையில், சமீபகாலமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.  அதன்படி தமிழகத்திலும் மதுபானக் கடைகளை சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து பரிசிலிக்கும்படி அறிவுறுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி,  ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று   தெரிவித்துள்ளார்.