‘தியா அவுர் பாதி ஹம்’ என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் தீபிகா சிங்.

தீபிகாவின் தாய்க்கு கோவிட்-19 தொற்று இருப்பது டெல்லி லேடி ஹார்திங்கே மருத்துவக் கல்லூரி உறுதி செய்துள்ளது .

இதற்கான முடிவுகளை அவர்கள் தர மறுப்பதாகவும், அதைப் புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதித்ததாகவும், பரிசோதனை முடிவு இல்லையென்றால் தன் தாயை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்பதால் தயவுசெய்து தனக்கு உதவ வேண்டும் என்று தீபிகா சிங் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CBVezWPA_c_/

தீபிகா சிங் குடும்பம் 45 பேர் கொண்ட பெரிய குடும்பம் என்பதால், தன் தாயை வீட்டில் தனிமைப்படுத்துவது ஆபத்து என்றும், தொற்று அனைவருக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியையும் தனது பதிவில் அவர் டேக் செய்துள்ளார்.