சென்னை

கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் உடன் தமிர்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து உள்ளது.

இதன் கூட்டு முயற்சியாக கொரோனா தொற்று தடுக்கும் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் சித்த மருந்தான கபசுரா குடிநீர், நொச்சி குடிநீர் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சித்த மருந்துகளின் வைரஸ் எதிர்ப்பு செயல்பாடு குறித்து ஆராயச்சி செய்து வருகின்றனர்.

கண்ணுக்குத்தெரியாத  நுண்ணூரியான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட  சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.  இநத் வைரஸ் தொற்று பரவலை தடுக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. உலகம் முழுவதும் சுமார் 600 நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தைச்செலவிட்டு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு சாதகமான முடிவும் தெரிய வில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் அலோபதி மருத்துவம் மட்டு மின்றி சித்தா, ஓமியோபதி மருந்துகளாலும் குணமடைந்து வருகின்றனர். சித்தா மருந்தான கபசுர குடிநீர், ஓமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம் போன்ற மருந்துகளின் செயல்களும் சிறப்பாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றன்ர.

இந்த நிலையில், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்,  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கூட்டாக இணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் ஈடுபட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,   இரு நிறுவனங்களும் சுகாதார ஆராய்ச்சியின் பல்வேறு துறைகளில் கூட்டாக பணியாற்றுவதற்கான நிபுணத்துவம் மற்றும் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

அதன்படி,  இரு பல்கலைக்கழகங்களும் சுகாதாரத்துறையில், குறிப்பாக தொற்றுநோய்கள் மற்றும் உயிரியல் நோய்களில் அடிப்படை மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிகள்,  தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் போன்ற ஒன்றிணைந்து செயல்பட மற்ற பகுதிகளையும் அவர்கள் ஆராய்வார்கள்.

சித்த மருந்துகளான கபசுர குடினீர் மற்றும் நோச்சி குடினீர் போன்ற  மருந்துகளின் வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக அவர்கள் கூட்டாக விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் குறித்தும்  ஆய்வுகள் நடத்த உள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.  தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்.பி.அஸ்வத்தாமன், துணைவேந்தர் சுஷா சேஷையன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் சி.பாலசந்திரன், தேன்சிங் ஞானராஜ்  ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.