சென்னை:

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில்   1,479 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

bty

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  40,698 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், குணமடைந்தோர் எண்ணிகையும் மொத்தம் 22,047 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் வெளியூர்களில் இருந்து திரும்பியவர்கள். சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமுள்ள 28,924  பேரில்  13,906 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். , 14,723 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில்  இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்:

அரியலூர் -4, செங்கல்பட்டு 128, சென்னை 1477, கோவை 5, கடலூர் 4, தருமபுரி 3, திண்டுக்கல் 2, கள்ளக்குறிச்சி 13, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 5, கரூர் 1, மதுரை 31, நாகை 8, நாமக்கல் 2, பெரம்பலூர் 1, புதுக்கோட்டை 6, ராமநாதபுரம் 5, ராணிபேட்டை 4, சிவகங்கை 12, தென்காசி 4, தஞ்சாவூர் 5, தேனி 3, திருவள்ளூர் 92, திருவண்ணாமலை 22, திருவாரூர் 6,  தூத்துக்குடி 18, திருநெல்வேலி 15, திருச்சி 7, வேலூர் 4, விழுப்புரம் 16, விருதுநகர் 4.

[youtube-feed feed=1]