சென்னை

மிழக அரசு  தமிழ் உச்சரிப்பைப் போல ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ததில் தவறுகள் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்புக்கு மாறாக உள்ளன.  குறிப்பாக அம்பத்தூர் என்னும் ஊரை ஆங்கில பெயர் உச்சரிப்புப்படி அம்பட்டூர் எனவும் தண்டையார்பேட்டையை தொண்டியார்பெட் எனவும் படிக்க நேரிடுகிறது

எனவே தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் சில ஊர்களின் பெயரை அரசு மாற்றம் செய்தது.   அனைத்து ஊர்களின் பெயர்களையும் இதைப்போல மாற்றம் செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்த தமிழக அரசு இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஊர்களின் பெயர் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புக்குத் தமிழக நெட்டிசன்கள் பலர் டிவிட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இவ்வாறு மாற்றப்பட்ட பெயர்களில் தவறு உள்ளதையும் சுட்டிக் காட்டி உள்ளனர்.  இந்த தவறுகளை முதலில் திருத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.