டெல்லி: கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல என்று டெல்லி ஆளுநரின் உத்தரவு குறித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ரத்து செய்தார்.
டெல்லி சேராத பிற மாநிலத்தவர் சிகிச்சைக்கு வந்தாலும் அவர்களைச் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுக்கக்கூடாது என உத்தரவிட்டார். இதனால் ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந் நிலையில் ஆளுநர் முடிவு குறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறி உள்ளதாவது: கருத்து வேறுபாடுகளுக்கான நேரம் இதுவல்ல. ஆளுநர் எடுத்த எந்த முடிவையும் நாங்கள் பின்பற்றுவோம். அவரது உத்தரவுகள் செயல்படுத்தப்படும்.
இதுவும் எங்கள் பொறுப்பு. அரங்கங்கள் போன்றவற்றில் நாங்கள் எவ்வாறு வசதிகளை மேம்படுத்துகிறோம் என்பதை நான் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கிறேன்.
அண்டை மாநிலங்களை நான் அப்படியே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .அங்குக்கு அதிகமான மக்கள் டெல்லிக்கு வர வேண்டியதில்லை. அவர்களும் தங்கள் பங்கைச் செய்கிறார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.