லண்டன்:

ந்தியாவில் தனது  உயிருக்கு ஆபத்து இருப்பதாக,  சர்வதேக அகதிகள் விதியை சுட்டிக்காட்டி, இங்கிலாந்திலேயே தஞ்சம் அளிக்கும்படி, விஜய்மல்லையா அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய்மல்லையா.

இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ9,961 கோடி கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பி அடைக்காமல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு களுக்கு தப்பிச்சென்று இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இங்கிலாந்தில் அவர் இருப்பதை அறிந்த இந்திய அரசு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.  இங்கிலாந்தில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் , விஜய் மல்லையாவை 28 நாட்களுக்குள் நாடு கடத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து  விஜய்மல்லையா எந்த நேரத்திலும் நாடு கடுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இதற்கிடையில், விஜய்மல்லையா, இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார், மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் அடைக்கப்பட இருக்கிறார் என பல தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், இங்கிலாந்து நீதிமன்றங்களில் மல்லையாவுக்கு எதிரான மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் நாடு கடத்தப்படுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

தற்போது, அதை உறுதி செய்யும் வகையில், விஜய் மல்லையா இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மனித உரிமை கமிஷனின் விதிகளின் அடிப்படை யிலும், மனிதாபிமான அடிப்படையிலும்  அவர் தஞ்சம்  கோரியிருக்கிறார். இதுதொடர்பாக அங்குள்ள சிஎன்பிசி-டிவி 18 தகவல் வெளியிட்டு உள்ளது.

ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் (ECHR) 3 வது பிரிவின் கீழ் விஜய் மல்லையா, இங்கிலாந்து அரசிடம்  தஞ்சம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மனுவில், தன்னை இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டால், உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மனித உரிமைக்கழகத்தின் ECHR இன் 3 வது பிரிவு என்பது சர்வதேச அகதிகள் பாதுகாப்பு தேவைப்படுபவர்களால் பயன்படுத்தப்படும் விதியாகும். இதையே தற்போது விஜய்மல்லையா தனக்கு ஆதரவான அஸ்திரமாக எடுத்துள்ளார்.