சென்னை:

ந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயராது நிவாரண உதவிகள் செய்து வந்த ஜெ.அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது 62வது பிறந்தநாளிலேயே அமரரானார்.

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற  எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு வென்டிலேட்டர் வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஜெ.அன்பழகன் உடல்நிலை  குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்மி போனிலும், திமுக தலைவ்ர மு.க.ஸ்டாலின் உள்பட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனை சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

தமிழிசை உதவி

இதற்கிடையில் ஜெ. அன்பழகனுக்குத் தேவையான முக்கிய மருந்துகள் தெலுங்கானா மாநிலம் தராபாத்தில்தான் கிடைப்பதால் அங்கிருந்து அவற்றை அனுப்பி வைக்க முடியுமா என்று திமுக தரப்பில் இருந்து தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அவரும் உடடினயாக மருந்துகளை  நேற்று அதிகாலை 4 மணிக்கு இண்டிகோ விமானத்தில்  அனுப்பி வைத்தார். அந்த மருந்துகள் உடனடியாக மருத்துவர்களிடம் சேர்க்கப்பட்டு, அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் கொரோனா தொற்றோடு கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப் பட்டதால் இன்று காலை 8.05 மணிக்கு ரேலா மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றிச் சுற்றி உதவி செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கொரோனாவாலேயே உயிரிழந்திருக்கிறார் என்பது கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் இதுவரை பல எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணம் அடைந்துள்ள நிலையில், முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்தான் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோய் விதிகளின் படி ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.