பெண் இயக்குனர் சஞ்சனாரெட்டி. தெலுங்கில் ராஜுகாடு என்ற படத்தை இயக்கினார். இதில் ராஜ் தருண், அமைரா தஸ்தூர் நடித்திருந்தனர். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி படத்தை இயக்குகிறார் சஞ்சனா ரெட்டி.
சஞ்னா ரெட்டி அவர் நேற்று அவரது அதிக காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக் கப்படுகிறது. டாக்டர்கள் உடனிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கர்ணம் மல்லேஸ்வரி படத்தை தயாரிக்கும் கோனா வெங்கட் தயாரிக்கிறார். அவரிடம் சஞ்சனா பற்றி கேட்ட்போது,’ அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருகிறார்’என்றார்.
சஞ்சனா ரெட்டி இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.