கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது: லாக்டவுன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள அனைத்து தளர்வுகளும், நிபந்தனைகளும் அமலில் இருக்கும். முன்னதாக, திருமணம் அல்லது இறுதி சடங்கு போன்ற சமூக நிகழ்ச்சிகளில் 10 பேரை மட்டுமே நாங்கள் அனுமதித்தோம், இப்போது அதை 25 ஆக உயர்த்தி உள்ளோம் என்றார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், அவர் மாநிலத்தில் கொரோனா லாக் டவுன் ஜூன் 15ம் தேதி வரை நீட்டித்து இருந்தார். அதற்கான நிபந்தனைகளையும் அறிவித்து இருந்தார். மத்திய அரசு நாடு தழுவிய அறிவித்து இருந்து 4வது கட்ட லாக்டவுன் முடியும் முன்பே அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.
இதனிடையே, மிசோரம் அரசானது நாளை தொடங்கி 2 வாரத்துக்கு லாக்டவுன் இருக்கும் என்று இன்று அறிவித்தது. முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.