டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் டிவி.வரதராஜன். இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், பட்டுக் கோட்டை பெரியப்பா, அருணாச்சலம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.


இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியது:
என் நண்பர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது, பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கேட்டபோது மருத்துவமனையில் பெட் இல்லை, அழைத்து வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகங்கள் கூறின. அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரிவில்லை, அவர் மிகவும் ஒழுக்க வழிமுறைகளை கடைபிடிப்பவர். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மாஸ்க் அணிவது சென்று அரசு நடை முறைகளை கடை பிடியுங்கள்
இவ்வாறு வரதராஜன் கூறி உள்ளார்.