டெல்லி: இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசை கடுமையாக சாடி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதன் விளைவாக ஊரடங்கு 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் பாதிப்பு வரைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், ஊரடங்கு மூலம் அந்த நாடுகள் கொரோனாவை எப்படி சமாளித்தன, ஊரடங்கை எவ்வாறு அமல்படுத்தின என்பதை விளக்கி உள்ளார்.
அந்த 4 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தினார்கள் என்பதையும், இந்தியாவில் லாக்டவுன் மார்ச் 25ம் தேதி முதல் நடைமுறையில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை. ஊரடங்கை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த வரைபடம் மூலம் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்று இது டிமானிடைசேஷன் 2.0 என்றும் குறிப்பிட்டுள்ளார்.