
ரயில் நிலை நடைமேடையில் அவரது உடல் கேட்பாரற்று வைக்கப்பட்டு இருக்க, அந்த பெண்ணின் ஒரு வயது குழந்தை, தாய் இறந்தது தெரியாமல் தாயின் உடலின் மேல் போர்த்திய துணியை இழுத்து, தன்மீது போர்த்தியும், இறந்த தாயை எழும்பியும் வந்தார். இதுதொடர்பான கண்ணீரை வரவழைக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், அந்த குழந்தையை, பிரபல இந்தி நடிகரான ஷாருக்கானின் ‘மீர்’ பவுண்டேஷன் தத்து எடுத்துள்ளது.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஷாருக், பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்று குறிப்பிட்ட ஷாரூக், நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.