இன்று திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள்
20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் மட்டுமின்றி தமிழக நலனினும், தமிழக மக்களின் மீதும் அக்கறை கொண்டு பல்வேறு சமூக சீர்த்திருத்தங்களை அமல்படுத்தியவர் கருணாநிதி.
1924ம் ஆண்டு திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஜூன் 3ம் தேதி அன்று 1 முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். 1942ம் ஆண்டு , ஆகஸ்ட் 10ம் தேதியன்று ‘முரசொலி’ கையெழுத்தி பிரதி பத்திரிகையை நிறுவினார். அதன்மூலம் கட்சியின் அறிவிப்புகளை வெளியிட்டு வரவேற்பை பெற்றார்.
1953 ஆம் ஆண்டு டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் கல்லக்குடி என்று பெயர் சூட்டக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து கருணாநிதி மேற்கொண்ட போராட்டம் அவருக்கும் திமுகவுக்கும் பெரும் புகழைத் தேடித் தந்தது.
தமிழக அரசியல் தளத்தில் யார் இந்த கருணாநிதி என்று அனைவரையும் பேச வைத்து, தமிழகத்தின் பிரபலமான லைவராக பரிணமிக்க செய்தது.
1957ம் ஆண்டு முதன்முதலாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1961 ம் ஆண்டு திமுக கட்சியின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1967ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ம் ஆண்டு முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியையும் வழிநடத்தி வந்தார்.
இலக்கியவாதி… சீர்த்திருத்த வாதி… என பல்வேறு முகங்களைக்கொண்ட கருணாநிதி, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
தமிழகத்தில் அதிக வருடம் முதல்வராக இருந்து சாதனை படைத்து மட்டுமின்றி 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஒரே தலைவரும் கருணாநிதிதான். அதுமட்டுமின்றி, இதுவரை அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஒரே தலைவர் கருணாநிதி.
அதுபோல், தமிழக அரசியலில் 80ஆண்டு காலம் பங்களிப்பை வழங்கிய கருணாநிதி, திமுக கட்சிக்கு 50 ஆண்டு காலமாக தலைவராக இருந்தவர்.
தமிழக அரசியலில் கர்மவீரர் காமராஜருக்கு பிறகு, ஒரு வலிமையான தலைவராக திகழ்ந்து, உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என தாரக மந்திரத்தை கடைபிடித்து, மத்தியஅரசுகளின் மக்கள் விரோத போக்குக்கு உடனடியாக குரல் எழுப்பிய ஒரே தலைவர் கருணாநிதி.
தலைமுறை தாண்டிய கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் ராஜாஜி, டி பிரகாசம் , ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 11 முதல்வர் களின் ஆட்சிக்காலத்தில், அவர்களை மிஞ்சி அரசியல் செய்த தமிழகத்தின் ஒரே தலைவர் கருணாநிதி…
தமிழக மக்களால் அன்போடு “கலைஞர்” என்று அழைக்கப்படும் கருணாநிதி,,,, . தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென தனி இடம் பிடித்து, 80 ஆண்டு காலம் தமிழக அரசியலில் அசைக்க முடியாத, அணையாத விளக்காக திகழ்ந்தவர்.
என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று மேடையில் அவர் கர்ஜிக்கும் வார்த்தைக்கு மயங்காதவரும் எவரும் கிடையாது..
தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார்.
சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார்.
ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்றும் கலைஞரின் ஆட்சித் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதி நம்மை விட்டு மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும் மறையாது…
கலைஞரின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது 97வதுநாளில், அவரது புகழ் பாடுவோம்…