சென்னை:
ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், இந்த பயணிகள் சேவை சென்னைக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், கொரோனா தீவிரமடைந்து வரும் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ரயில் சேவைகளை தொடங்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்படி, நாளை மறுதினம் (ஜூலை 1 ஆம் தேதி) முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இடையே சில பயணிகள் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் 4 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு உள்ளது.
அதன்படி, ஜூன் 1 முதல் கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோயில் -திருச்சி, கோவை -காட்பாடி -கோவை ஆகிய நான்கு பயணிகள் ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இந்த பயணிகள் ரயில் சேவை சென்னைக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.