சென்னை

மிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.

ஆயினும் இதனால் எவ்வித பயனும் இல்லாமல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை கொரொனாவால் 154 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 4,66,550 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை மொத்தம் 11,313 பேர் முழு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.