ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்..

 

கொரோனா வைரஸ் எத்தனையோ வேடிக்கைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

அதில் ஒரு வேடிக்கை இது:

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டல் கொரோனா நோயாளிகள் ’’தனிமைப்படுத்துதல்’ மையமாகச் செயல் பட்டு வருகிறது.

அங்குள்ள நோயாளிகள் பணம் கொடுத்து  அந்த மையத்தில் தங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று மது விற்பனை தொடங்கியுள்ள நிலையில், அந்த ஓட்டலின் பாரில் கனஜோராக மது விற்பனையும் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து , மது வாங்கி செல்கிறார்கள்.

உச்சக்கட்ட கொடுமை என்ன வென்றால், அந்த மாவட்ட ஆட்சியர் சுதீர்பாபு , இதனை நியாயப்படுத்துவதுதான்.

‘’ தனிமைப்படுத்துதல் மையத்தின் வாசலும், ’’பார்’’ கவுண்டர் வாசலும் வேறு வேறு இடத்தில் தானே உள்ளது.தவிர, நோயாளிகளுக்கான மையம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் உள்ளது. ஆனால் மதுபானம் விற்கும் ’’பார்’’கீழ்த் தளத்தில் தான் உள்ளது’’ என்கிறார், கலெக்டர்.

– ஏழுமலை வெங்கடேசன்