சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது.
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000த்தை தாண்டிய சென்று கொண்டிருக்கிறது.
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12,203 பேர். நேற்று புதிதாக நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் 558 பேர். தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6253 பேர். சென்னையில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 5765 பேர. இதுவரை கொரோனாவுக்கு பலியோனார் எண்ணிக்கை 93.

குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,252 ஆக உயர்ந்த நிலையில், கோடம்பாக்கம்- 1,559, திரு.வி.க. நகர்- 1,325 தேனாம்பேட்டை- 1,317 தண்டையார்பேட்டை- 1,262 அண்ணா நகர்- 1,046 ஆகிய 6 மண்டலங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



Patrikai.com official YouTube Channel