சரக்கு விற்க புதுப்புது ஐடியாவுடன் கேரளா…

தென் இந்தியாவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறப்பு.

தொழிலாளர் சட்டத்தை அமல் படுத்தும் வகையில் காலை 9 மணிக்குக் கடைகள் திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்.

ஜனத்திரளை கட்டுப்படுத்தும் முகமாக, முதலில் ஆன்லைன் மூலம் அதாவது வீட்டுவாசல் படியில் மதுபானம் கிடைக்குமாறு ஒரு ஏற்பாட்டை பரிசீலனை செய்தது, கேரள அரசு.

அது சரிப்பட்டு வராது என்று தோன்றியதால், மதுபான கடைகளில் நேரடியாக மதுவை விற்பனை செய்யும் முடிவை கடைசி நேரத்தில் மேற்கொண்டது.

பாக்கெட்டில் பணத்தை வைத்துக்கொண்டு, நேராகக் கடைக்குப் போய் மதுவை வாங்க முடியாது.

 பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலியில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து, ஈ. டோக்கன் பெற்றுக்கொண்டால் மட்டுமே. அதனை கடைகளில் காட்டி மது வாங்கலாம்.

 கியூவில் 5 பேருக்கு மேல் நிற்க அனுமதி இல்லை.

மது கேட்டு, ஆன்லைனில் ஒரு முறை பதிவு செய்து கொள்வோர், நான்கு நாட்கள் கழித்தே மீண்டும் பதிவு செய்ய முடியும்.

மற்ற மாநிலங்களைப் போல், இங்கும் பார்சல் மட்டுமே பெற முடியும்.

– ஏழுமலை வெங்கடேசன்