டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை அடைய 109 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு 50000 அதிகரிக்க 9 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.   நேற்று இந்தியாவில்  கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,58 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.   கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை அடைய சுமார் 109 நாட்கள் ஆகி உள்ளது.  அதே வேளையில் மேலும் 50000 தாண்ட வெறும் 9 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளன.

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில்  இந்தியாவில் உள்ள மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒருவர் உள்ளனர்.   இங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  முதன் முதலில் 100க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிப்பு அடைந்தது மகாராஷ்டிர மாநிலத்தில் ஆகும்.  இங்கு இதுவரை 1897 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கடந்த 5 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 199 பேர் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாகத் தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதற்கு அடுத்தபடியாக டில்லி மற்றும் குஜராத் உள்ளன.   இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்து குஜராத்  இன்று சற்றே பின் தங்கி நான்காம் இடத்துக்குச் சென்றுள்ளது.  அதிகம் மரணமடைந்தோர் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு மரணம் அடைந்த 938 பேரில் 764 பேர் அகமதாபாத்தை சேர்ந்தவர்களவர்க்ள்,    இங்கு அநேகமாக இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளது.

நேற்று டில்லியில் 15 பேர், மத்தியப் பிரதேசத்தில்  8 பேர்,  மேற்கு வங்கம், தமிழகம், தெலுங்கானாவில் 6 பேர் என மரணம் அடைந்துள்ளனர்.  ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் மூவரும், ஜம்மு காஷ்மீரில் இருவரும், ஆந்திரா, பீகார் அரியானா மாநிலங்களில் தலா ஒருவரும் நேற்று உயிர் இழந்துள்ளனர்.

தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் அனைவரும் குணம் அடைந்து கொரோனா பாதிப்பு அற்ற மாநிலமாக உள்ளன.