மும்பை
மகாராஷ்டிராவில் இன்றும் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிராவாக உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் ஒருவர மகாராஷ்டிர மாநிலத்தவராக உள்ளனர். கட்னத 24 மணி நேரத்தில் இங்கு 2091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 54,782 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 16,954 பேர் குணம் அடைந்து தற்போது 36,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர தலைநகரான மும்பையில் புதியதாக 1002 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,974 ஆகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 39 பேர் உயிர் இழந்துள்ளனர் . இவர்களில் 28 பேர் ஆண்கள் மற்றும் 11 பேர் பெண்கள் ஆவார்கள். மொத்த சரணடைந்தோர் எண்ணிக்கை 1065 ஆகி உள்ளது இதுவரை 8,814 பேர் குணம் அடைந்துள்ளனர்.
மும்பை நகரில் மொத்தமுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவமனைகளில் உள்ள 13,023 படுக்கைகளில் 82%, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 4,116 படுக்கைகளில் 63%, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள 644 படுக்கைகளில் 96% மற்றும் வெண்டிலேட்ட்ர் வசதிகளுடன் உள்ள 359 படுக்கைகளில் 66% நிரம்பி உள்ளன.