கோவை:

தேஜஸ் ரக போர் விமானம் கோவை அருகே உள்ள சூலூர் விமானப் படை தளத்தில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய  விமான படையில் இணைக்கப்பட்டது

கோவை மாவட்டம் சூலூர் விமான படைத் தளத்தில் 18வது ஸ்குவாட்ரன் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இன்று முதல்  செயல்பாட்டுக்கு வருகின்றது. இதையடுத்து, அந்த ஸ்வாட்ரன் படைப்பில்,   நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் இன்று இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது.

சூலூரில் உள்ள இந்திய விமான தளத்தில் இந்திய விமான படை தளபதி மார்சல் பதவுரியா முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

விழாவில்,  நவீன ரக தேஜஸ் விமானம் இருந்த அரங்கை ரிப்பன் வெட்டி இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதவுரியா திறந்து வைத்தார். பின்னர் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்ட சர்வ தர்ம பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக விமானம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய விமான படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த சகாச நிகழ்வுகளை இந்திய விமான படை தளபதி, எச்.சி.எல் அலுவலர்கள் பார்வையிட்டனர். விமான படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசங்களை செய்து காட்டின. இதனை தொடர்ந்து எச்.ஏ.சி அலுவலர்கள் புதிய தேஜஸ் விமானத்தின் ஆவணங்களை இந்திய விமான படை ஏர்சீப் மார்சல் பதவுரியாவிடம் ஓப்படைத்தனர்.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. போர்விமானங்களிலேயே தேஜஸ் விமானம் சிறிய மற்றும் எடை குறைந்த விமானமாகும். 
ஏற்கனவே  இந்திய விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 ஐ.ஓ.சி வகையை சேர்ந்த 20 விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.