பெங்களூர்:
கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 4ஆம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்கம் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பின்னர் பெரும்பாலானவை நாட்டில் செயல்படும் எனவும், ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
தற்போதே ரயில், பேருந்துகள் மற்றும் விமான சேவைகள் கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதுதொடர்பான முடிவுகளை மாநில அரசுகள் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னர் மாநில அரசுகளே முழு முடிவுகளையும் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதன்படி, மக்கள் கூடும் பொது இடங்களை திறப்பது தொடர்பாக மாநில அரசுகள் தங்கள் முடிவுகளை அறிவிக்கலாம். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜூன் 1 முதல் கர்நாடகத்தில் முழு இயல்பு திரும்பலாம் எனத் தெரிகிறது.”