மும்பை:
ந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.  அங்கு இதுவரை 52,67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18 போலீசார் உள்பட 1695 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4வது முறையாக ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்தே வருகிறது.  கொரோனா வைரஸ் தாக்கம்  மகாராஷ்டிர மாநிலத்தில் உச்சம் பெற்றுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு  இதுவரை 52 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,695 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் காவல்துறையினரும் பணியாற்றி வருவதால்,  பல காவலர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 194 போலீஸ் அதிகாரிகள் மற்றும்  1,615 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  1,113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.  அதுபோல இதுவரை  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட   17 போலீஸார் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 12 பேர்  மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மக்கள் நெருக்கம் மிகுந்த  தாராவி, மார்க்கெட் பகுதிகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் பணி, கூட்டமான இடங்களில் மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிராவில்,  55 வயதுக்கு மேற்பட்ட போலீஸார்,  உடல்ரீதியான கோளாறுகள் இருப்போர் பணிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காவலர்கள் தொடர் பாதிப்பு சக காவல்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.